முகப்புகோலிவுட்

கௌதம் மேனனின் 20 வருட கலைப் பயணம்; சிங்கப்பூரில் சிறப்பு விழா..!

  | January 22, 2020 16:52 IST
Gautham Vasudev Menon

இயக்குனர் கௌதம் மேனனின் 20 ஆண்டு திரைப்பயணத்தின் நிறைவை கொண்டாடும் விதமாக சிங்கப்பூரில் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இயக்குனர் கௌதம் மேனனின் 20 ஆண்டு திரைப்பயணத்தின் நிறைவை கொண்டாடும் விதமாக சிங்கப்பூரில் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இயக்குனர் கௌதம் மேனன் ‘மின்னலே' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். அப்படத்தில் மாதவன், ரீமா சென், விவேக், அப்பாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். கௌதமின் முதல் படமே மொத்த ரசிகர்களை கொண்டாட வைத்தது. முக்கியமாக அப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்துள்ள அனைத்து பாடல்களும் இன்ரு வரை அனைவருக்கும் ஆல் டைம் ஃபேவரைட் பாடல்களாக கொண்டாடப்படுகிறது.

அதையடுத்து ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகளில் இயல்பான காதலையும் சேர்த்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களை எடுத்து வெற்றியை தன்னுடனே வைத்துகொண்டு பயணித்தார். பிறகு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், அஜித்துடன் என்னை அறிந்தால், சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களை தனக்கே உறிய ஸ்டைலில் மிக அழகாக, முக்கியமாக இளைஞர்கள் கொண்டாடும் கதைகள் மற்றும் கதாப்பாத்திரங்களை படைத்தார்.
விகரமை வைத்து அவர் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியீடு சற்று தள்ளிப்போக, சமீபத்தில் தனுஷை வைத்து அவர் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்ட படம் வெளியானது. ஆனால், அப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பேசப்படவில்லை. தற்போது, ஜோஷுவா : இமை போல் காக்க எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
கௌதம் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களிலும் நல்ல வரவேற்பைப் வெற்றியையும் பெற்றாலும், அதைவிட மேலாக அப்படங்களில் உள்ள பாடல்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஒவ்வோரு பாடல்களும் தமிழ் பாடல்களைக் கேட்கும் அனைவருக்கு பிடித்தவாரு அமைந்திருக்கும்.
அவர் திரையுலகிற்கு வந்து 20 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு சிறப்பு செய்யும் விதமாக சிங்கப்பூரில் “Orey nyabagam - Reminiscing 20 years of GVM music” என்ற சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முக்கியமாக அவரின் படத்தில் உள்ள பாடல்களை பல இசைக் கலைஞர்கள் இணைந்து பாடி கொண்டாடவுள்ளனர். இந்த நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சி குறித்தும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் குறித்தும் இயக்குநர் மிஷ்கின் மற்றும் விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவைப் பதிவிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்