முகப்புகோலிவுட்

'ஒரு குட்டி கதை சொல்லட்டுமா' - மாஸ்டர் படத்தின் அடுத்த அப்டேட்

  | February 12, 2020 11:09 IST
Master Movie Poster

பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று, ஒரு குட்டி கதை சொல்ல வருகிறார் விஜய்.

துனுக்குகள்

 • 'ஒரு குட்டி கதை சொல்லட்டுமா' - மாஸ்டர் படத்தின் அடுத்த அப்டேட்
 • ஒரு நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடிக்கின்றனர்.
 • பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று, ஒரு குட்டி கதை சொல்ல வருகிறார் விஜய்
பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து 'தளபதி' விஜய் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். 'மாஸ்டர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என்று ஒரு நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடிக்கின்றனர். 

விஜயின் மாஸ்டர் திரைப்படம் வருகின்ற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9ம் தேதி வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை படு குஷியில் ஆழ்த்தியது. அடுத்து என்ன வெளியாகும் என்றும் ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று, ஒரு குட்டி கதை சொல்ல வருகிறார் விஜய்.  

ஆம், மாஸ்டர் படத்தின் சிங்கிள் டிராக்  ஒன்று பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு குட்டி கதை என்ற பாடலை படக்குழு அன்று வெளியிட உள்ளது. மேலும் இந்த பாடலை இயக்குனரும், பாடகருமான அருண்ராஜா காமராஜ் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com