முகப்புகோலிவுட்

'ஒத்தசெருப்பு' தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல் - கடம்பூர் ராஜு!

  | October 03, 2019 15:22 IST
Kadambur Raju

துனுக்குகள்

 • விருது வழங்கும் விழாக்களில் பங்கேற்று விருதுகளை பெற்ற படம் இது
 • கடம்பூர் ராஜு இப்படம் தமிழ் சினிமான் மைல் கல் என்று கூறியுள்ளார்
 • இந்த படத்தை தேசிய விருதுக்கு பரிந்துறைக்கவும் முடிவு செய்துள்ளார் இவர்
பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்து வெளிவந்துள்ள படம் ‘ஒத்த செருப்பு' இந்த படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரே நடிகர் நடித்து இயக்கி, தயாரித்துள்ள படம் ஒத்த செருப்பு என்கிற பெருமையை இப்படம்  பெற்றுள்ளது. பல்வேறு விருது போட்டியிலும் இப்படம் விருதுகளை கைப்பற்றியுள்ளது. இந்த படத்தை பலரும் பாராட்டி வருகிறார். இந்நிலையில்,  
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு, 'ஒத்தசெருப்பு' தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல். ஆஸ்கர் விருதுக்கு தகுதியான திரைப்படம் ஒத்தசெருப்பு. தேசிய விருது கிடைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைப்போம் என்றார்.
 
முன்னதாக பேசிய பார்த்திபன் 'ஒத்த செருப்பு' திரையரங்கில் வெளியாகி 2 வாரங்களான நிலையில், பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவதால், 'ஒத்தசெருப்பு' படத்தை திரையரங்குகளில் இருந்து தூக்கியிருப்பது வேதனை அளிப்பதாக கூறினார்.
 
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com