முகப்புகோலிவுட்

'முதல்ல நம்ம நல்லா இருக்கனும்' - மாஸ்டர் அப்டேட் குறித்து கருத்து வெளியிட்ட சாந்தனு

  | March 24, 2020 12:13 IST
Shanthanu Bhagyaraj

துனுக்குகள்

 • மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது
 • இந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள சாந்தனு
 • அப்டேட்ஸ் விரைவில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்
கொரோனா காரணமாகப் பல படங்களில் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 தேதி வெள்ளியன்று வெளியாகக் காத்திருந்து மரிஜுவானா உள்ளிட்ட 6 படங்கள் வெளியாகாமல் காத்திருக்கின்றன. மக்கள் தேவை இன்று வெளியில் வருவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது, ஆகையால் மாஸ்டர் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலர் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்த நிலையில் இதற்குப் பதில் அளித்துள்ள சாந்தனு, "படம் குறித்த அப்டேட் கேட்டு விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு, மாஸ்டர்' குறித்த அப்டேட்ஸ் விரைவில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். எனவே தயவு செய்து அமைதியாக இருக்கவும். இப்போதைக்கு, வீட்டில் பாதுகாப்பாக இருந்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கடப்பதற்கான வழிகளைப் பார்ப்போம். 
அவசியமான தேவைகளுக்காக மட்டும் வெளியே செல்லுங்கள். உடல்நலம் தான் முக்கியம் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com