முகப்புகோலிவுட்

பா. ரஞ்சித்- ஆர்யாவின் ‘சல்பேட்டா பரம்பரை’ படப்பிடிப்பு தொடக்கம்.!!

  | September 07, 2020 18:03 IST
Salpetta Parambarai

கே9 ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய திரைப்படம் ‘சல்பேட்டா பரம்பரை'. வட சென்னையில் உள்ள இளைஞன் தனது பாக்ஸிங் கனவுகளை எப்படி நிஜமாக்கிக்கொள்கிறான் என்பதைப் பற்றிய கதையாக இப்படம் அமையவுள்ளது. மேலும் இப்படத்தில், ‘அட்ட கத்தி' தினேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்துக்காகக் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, தனது உடற்கட்டை முற்றிலுமாக மாற்றிய ஆர்யா, தனது புகைப்படங்களை “ரஞ்சித் சார் நான் ரெடி” என சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதையடுத்து இப்படத்திற்கான முதற்கட்ட வேலைகள் துவங்கப்பட்டது. இருப்பினும், கொரோனா தொற்று காரணமாக தொழில் நிறுத்தப்பட்டதால் படம் தாமதமானது.

இப்போது, சமீபத்திய அறிக்கை என்னவென்றால், வரும் செப்டம்பர் 15 முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கும். ஆர்யா தனது பாத்திரத்திற்காக குத்துச்சண்டை திறன்களைப் பயின்று வருகிறார், மேலும் அவர் தனது தொழில் வாழ்க்கையின் மிகவும் சவாலான படம் என்று ஒருமுறை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

கோலிவுட்டில் இருந்து பிரபலமான சில முகங்களும் ஆர்யாவுடன் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், படப்பிடிப்புக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால், செப்டம்பர் 15 முதல் ஆர்யாவுடன் ‘சல்பேட்டா' படப்பிடிப்பை தொடங்க பா. ரஞ்சித் முடிவு செய்துள்ளார் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ‘போத ஏறி, புத்தி மாறி' எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான துஷாரா வடசென்னை பெண்ணாக ஆர்யாவுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. இவர் விரைவில் திரைக்கு வரவுள்ள ‘அன்புள்ள கில்லி' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறீப்பிடத்தக்கது. கே9 ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.



    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com