முகப்புகோலிவுட்

“ராஜாவா வாழ்ந்த ஜனம் வாழுதிப்போ ரோட்டுல வாயில்லா மக்களுக்கு வாதாடவும் கோர்ட்டில்ல” மகிழ்ச்சி ஆல்பத்தின் அடுத்த பாடல்

  | April 01, 2019 21:35 IST
Magizhchi Album

துனுக்குகள்

  • மகிழ்ச்சி ஆல்பம் தனியிசை கலைஞர்களால் பாடப்பட்டது
  • மகிழ்ச்சி ஆல்பத்தை இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கிறார்
  • மகிழ்ச்சி ஆல்பத்தின் வடசென்னை பாடல் வெளியானது
நீலம் பண்பாட்டு மய்யம் சார்பாக இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் தனிஇசைக்கலைஞர்களின் மகிழ்ச்சி ஆல்பத்தின் ஒரு பாடலாக ‘வடசென்னை' பாடல் தற்போது வெளியாகி இணையத்தை ஆட்கொண்டிருக்கிறது.

முன்னதாக மகிழ்ச்சி ஆல்பத்தில் இருந்து வெளியிடப்பட்ட பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இன்னும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் மகிழ்ச்சி ஆல்பத்தின் முக்கியபாடலான ‘வடசென்னை' பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாலை இந்த பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
 
வடசென்னை பகுதி குறித்தும் இந்த மண்ணின் மைந்தர்கள் குறித்தும் இந்த பாடல் விரிவாக பேசியிருக்கிறது. அரசியல், அதிகாரம் இவை எல்லாம் இந்த மக்களின் வாழ்விடத்தை பறித்துக்கொண்ட அவலமும். வடசென்னை குறித்து மறைக்கப்பட்ட உன்மைகளைப் பற்றியும் ஆழமாக பேசுகிறது இந்த பாடல்.

வடசென்னையின் எளிய மக்களின் கொண்டாட்டமான வாழ்க்கையை தனி இசைக்கலைஞர்கள் துள்ளியமாக பதிவு செய்திருக்கிறார்கள். இந்த பாடலும் மக்களிடையே நல்ல கருத்தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்