முகப்புகோலிவுட்

கட்டிப்பிடித்து முத்தமிட்ட பா.இரஞ்சித்; மகிழ்ச்சியில் அதியன் ஆதிரை!

  | July 11, 2019 17:05 IST
Irandam Ulaga Porin Kadaisi Gundu

துனுக்குகள்

  • பா. இரஞ்சித் தயாரிக்கும் இரண்டாவது படம் இது
  • அதியன் ஆதிரை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்
  • இசை அமைப்பாளர் இசை அமைக்கும் முதல் படம் இது
இயக்குநர் பா.இரஞ்சிதின் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது படம் ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு'. இந்த படத்தை இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கி இருக்கிறார்.
 
நடிகர் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிஜீஸ் ஆகியோர் நடித்துள்ள படத்திற்கு, தென்மா இசை அமைக்க கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
 
h37u8qbg

 
படப்பிடிப்பை முடித்து இசை கோர்ப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தை தயாரிப்பாளர் பா.இரஞ்சித் பார்த்து பாராட்டி இருக்கிறார், இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் இயக்குநர் அதியன் ஆதிரை “என் வாத்தியார், எனது தயாரிப்பாளர் பா.இரஞ்சித் நேற்று ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தை பார்த்த பிறகு வியந்து, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பெருமைப்பட்ட தருணம். முதன் முதலில் ‘அ,ஆ' எழுதி பெற்றோரிடம் வாங்கிய பாராட்டை விட ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.
 
மேலும் படத்தை பார்த்த பா.இரஞ்சித் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் அனைவராலும்  கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்றும் பா. இரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்