முகப்புகோலிவுட்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘குண்டு’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

  | August 27, 2019 16:07 IST
Irandam Ulagaporin Kadaisi Gundu

துனுக்குகள்

  • பா.இரஞ்சித் தயாரிக்கும் இரண்டாவது படம் இது
  • இந்த படத்தில் தினேஷ், ஆனந்தி நடித்துள்ளனர்
  • நாளை இப்படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கிறது
இயக்குநர் பா. இரஞ்சித் பரியேறும் பெருமான் படத்தை அடுத்து தயாரித்து வரும் படம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. இப்படத்தை இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். தென்மா இசை அமைக்கும் இந்த படத்தில் அட்ட கத்தி தினேஷ், கயல் ஆனந்தி இன்னும் பலர் நடித்துள்ளனர்.
 
 
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் டப்பிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் சில குறியீடுகளாக அமெரிக்க கொடி, கம்யூனிஸ்ட் சின்னம், அணுகுண்டு உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது. இது விவாதப்பொருளாகவும் ஆனது.
 
தற்போது இப்படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 28ம் நாம் வெளியிடப்படுகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனை அடுத்து டப்பிங், போஸ்ட் புரடெக்ஷ்ன் பணிகளை முடித்து விரைவில் இப்படத்தை திரைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்