முகப்புகோலிவுட்

“புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது” தொல்.திருமாவுக்கு இயக்குநர் பா.இரஞ்சித் வாழ்த்து

  | May 24, 2019 16:38 IST
Pa Ranjith

துனுக்குகள்

  • இயக்குநர் பா.இரஞ்சித் காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்
  • நீலம் பண்பாட்டு மையம் தொடங்கி நடத்தி வருகிறார்
  • நிலவுடமை போராளி பிர்சா முண்டா வாழ்க்கை வரலாற்றை இயக்கி வருகிறார்
நடந்து முடிந்த இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சாற்பற்ற ஜனநாயகக்கூட்டணி 38 இடங்களில் 37 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளது. பாண்டிச்சேரியில் ஒரு தொகுதியையும் இந்த கூட்டணி கைப்பற்றியது.
 
திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் போட்டியிட்டது. இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் போட்டியிட்டார்.  வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போதிலிருந்தே இரண்டு வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவியது. தமிழகத்தின் அனைத்து தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்தாலும் இந்த தொகுதியில் மட்டும் இழுப்பறியாகவே சென்றது.

தமிழ்நாடே எதிர்பார்க்கும் போட்டியாக மாறியது. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நேற்று மாலை தொல்.திருமாவளவன் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச்செய்தியாக மாறினார் .

கடும் போட்டியின் இறுதியில் விடுதலை சிறுத்தைக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன 3219 வாக்கு வித்யாசத்தில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி வாகை சூடினார். இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திரைப்பட இயக்குநரும், முற்போக்கு சிந்தனையாளருமாக பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் ,
 
“மகிழ்ச்சி !! இந்த வார்த்தையில் அண்ணன் #திருமா வெற்றியை அளவிடவே முடியாது, அதே போல் வேர்எவர் வெற்றியுடனும்ஒப்பிடமுடியாது ! மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருக்க முடியும்! ஆனால்
எப்போதும் நமக்கு புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது! ஜெய் பீம்!” நெகிழ்ச்யாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்