முகப்புகோலிவுட்

வேடிக்கை பார்க்கும் நாமும்தான் நீட் கொலைகளுக்கு காரணம்- பா.இரஞ்சித் ஆதங்கம்!

  | June 06, 2019 13:17 IST
Pa Ranjith

துனுக்குகள்

  • நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது
  • நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் இரண்டு மாணவிகள் தற்கொலை
  • இயக்குநர் பா.இரஞ்சித் நீட் தேர்வு குறித்து ஆதங்கம்
கடந்த ஆண்டு இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த போராட்டங்களில் மிகமுக்கிய போராட்டம் நீட் எதிர்ப்பு போராட்டாம். இப்போராட்டத்திற்கு அடிதளம் இட்டவர் அனிதா. நீட் தேர்வை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்தி மத்திய மாநில அரசுகள் கொடுத்த நம்பிக்கை பொய்த்தப்பின் தன்னுயிர் நீர்த்தார் என்பதையும் யாரும் மறந்திருக்கமுடியாது.
 
அதற்கு பின்பும் நீட் தேர்வு நடைபெற்றது. மாணவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். இந்த ஆண்டும் நீட் தேர்வு நடத்தப்பட்டு நேற்று அதன் முடிவுகள் வெளியாகின ஊடகங்கள் பல நீட் தேர்வில் கிராமபுற மாணவி சாதனை, நீட் தேர்வில் தமிழகத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி என செய்திகளை அடுக்கொண்டிருந்தே அதே வேலையில்தான் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் திருப்பூரை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷியா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
இச்சம்பவம் குறித்து இயக்குநரும் சமூக செயற்பாட்டாளருமான பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் “நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றது. இப்போது ரிதுஸ்ரீ-வைஷியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு நீட் என்ற கொள்கையை சட்டமாகக் கொண்டிருக்கும் மத்திய அரசு அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள்!” என தன்னுடைய ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.  
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்