முகப்புகோலிவுட்

வயது முதிர்வு காரணமாக பா.இரஞ்சித்தின் தந்தை மரணம்! பிரபலங்கள் அஞ்சலி!

  | July 12, 2019 13:50 IST
Pa Ranjith

துனுக்குகள்

 • பா.இரஞ்சித்தின் தந்தையின் பெயர் பாண்டுரங்கன்
 • இவரின் சொந்த ஊர் சென்னையை ஒட்டியுள்ள கரளபாக்கம்
 • இன்று காலை இரஞ்சித்தின் தந்தை உயிர் இழந்தார்
இன்றைய தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் பா.இரஞ்சித். மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள இயக்குநர்களில் ஒருவராகவும் பா.இரஞ்சித் இருந்து வருகிறார். குறுகிய காலத்தில் தனது நேர்மையான படைப்புகளால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.
 
hk4350qo

 
இவரது படங்கள் மட்டுமல்ல படங்களில் பேசப்படும் வசனங்கள், பதிவு செய்யப்படும் காட்சிகள் கூட சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் வாய்ந்தவை. திரைப்படங்கள் இயக்குவது மட்டுமல்லாமல், சமூக செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார்.
 
h14gtm

 
'சென்னை 28'  திரைப்படத்தில் வெங்கட் பிரபுவோடு உதவி இயக்குநராக பணியாற்றியவர், ‘அட்ட கத்தி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் மாபெரும் வெற்றி அடைய, இவர் இயக்கத்தில் அடுத்து உருவான படம் ‘மெட்ராஸ்' உழைக்கும் மக்கள் அதிகம் வசிக்கும் வடசென்னை பகுதி மக்களின் கொண்டாட்டத்தையும், சோகத்தையும் தத்ரூபமாக பதிவு செய்திருந்தது இந்த படம். இதற்கடுத்து இவருக்கு அடித்த ஜாக்பாட் தான் ரஜினியின் “கபாலி”. இதனைத் தொடர்ந்து 'காலா' என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தவர்.
 
gti189d

 
இந்நிலையில் இவருடைய தந்தை பாண்டுரங்கன் வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார். இரஞ்சித்தின் சொந்த ஊரான கரளபாக்கத்தில் பாண்டுரங்கன் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டு அமைப்பை சேர்ந்தவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
 
cu67g4eo

 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com