முகப்புகோலிவுட்

“சாதி இல்லா தமிழன் என்றே சொல்வோம் மகிழ்ச்சி” -மகிழ்ச்சி ஆல்பம் வெளியீடு

  | January 06, 2019 22:06 IST
Magizhchi

துனுக்குகள்

  • பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் இப்பாடலை தயாரித்தது
  • வானம் நிகழ்ச்சியில் இந்த ஆல்பம் வெளியிடப்பட்டது
  • இந்த ஆல்பத்தின் ஐயம் சாரி ஐய்யப்பா பாடல் கேரளாவில் கலைகட்டியுள்ளது
புரட்சி இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் கலை,இலக்கிய  பண்பாட்டு மய்யம் பெருமையுடன் வழங்கும் “THE CASTLESS COLLECTIVE” இன்டிபெண்டன்ட் இசைக்குழுவின் மகிழ்ச்சி ஆல்பம் முதல் பாடல் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
கடந்த டிசம்பர் 31 அன்று மாலை நீலம் கலை,இலக்கிய பண்பாட்டு மய்யத்தின் சார்பாக ‘The castless collective' இசைக்குழுவின் “மகிழ்ச்சி” ஆல்பம் வெளியிடப்பட்டது.
 
தற்போது “மகிழ்ச்சி” ஆல்பத்தின் முதல் பாடலான மகிழ்ச்சி பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடல் சமூகத்தில் பல ஆண்டுகாலமாக வலுவாக கட்டமைக்கப்பட்டிருக்கும் சாதி,மத கட்டமைப்பை கேள்விக்குட்படுத்தும் விதமாக பல கேள்விகளை சமூகத்தின் முன் எழுப்புகிறது.
 
சமூகம் நவீன நாகரீக வளர்ச்சியை நோக்கி நகர்ந்தாலும் புரட்சியாளர் அம்பேத்கர் குறிப்பிடுவது போல கண்ணுக்கு புலப்படாத  உண்மை அற்ற ஒரு உணர்வு சாதி.அத்தகைய சாதிதான் இங்கு எல்லா நாடுகளும் வளர்ச்சியை நோக்கி நகர்ந்தாலும் இந்தியா இன்னும் வளராமல் இருப்பதற்கு காரணமாக விளங்கி வருகிறது.
 


 இந்த நாட்டில் சகோதரத்துவத்தை அழித்து, சமத்துவத்தை அழித்து,சமூக நீதியை சிதைக்கும் வேலையை கண்ணுக்கு புலப்படாத சாதி தன் வேலையை இன்றளவும் தீவிரமாக செய்து வருகிறது.
 
இந்த சாதி, மத கோட்பாடுகளை எதிர்த்து கேள்விக்குட்படுத்துகிறது. “சாதியற்ற தமிழர்களாய், இணைவோம் மகிழ்ச்சி, சாவை கண்டு அஞ்ச மாட்டோம் செய்வோம் புரட்சி “ என சகோரத்துவத்தையும் சமத்துவத்தையும் முன் நிறுத்தி அறைகூவல் விடுக்கிறது மகிழ்ச்சி பாடல்.
 
கடந்த கால துயரங்களை, மறந்து மனிதத்துவத்தோடு இணைந்து வாழ அதுவே மகிழ்ச்சி. சாதி,மத பேதங்களை உடைத்து ஒன்றிணைவதே மகிழ்ச்சி என பிளவுபட்டு கிடக்கும் மக்களை மகிழ்ச்சியில் ஒன்றிணைக்கிறது மகிழ்ச்சி பாடல்.
 
உரிமைக்காக போராடுவோம், தடைகளை கடந்து ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் விழிப்புற்று வருகிறோம் பாரு என சனாதனத்தை உடைத்து அன்பால் நிரப்பு என்று பதில் கொடுக்கிறது இந்த பாடல். மனிதனை மனிதனாய் போற்றவும்,மாற்றவும் செய்யும் மகிழ்ச்சி. இந்த ஆல்பத்தை  பா. இரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இருக்கிறது. சத்தியன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இசை அமைப்பாளர் தென்மா இந்த பாடலுக்கு இசை அமைத்திருக்கிறார். ஆர்.கே செல்வா படத்தொகுப்பு செய்திருக்கிறார். அறிவு, லோகன் இன்னும் பல பாடலாசிரியர்கள் இந்த ஆல்பத்திற்கு பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். நடன இயக்குனர் சாண்டி இந்த பாடலுக்கு நடன பயிற்சி அளித்திருக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்