முகப்புகோலிவுட்

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகம் அடுத்த படைப்பு!!!

  | April 19, 2019 15:01 IST
Pa Ranjith

துனுக்குகள்

  • இப்படத்தை சுரேஷ் மாரி இயக்குகிறார்
  • இவர் பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்
  • கலையரசன், அரவிந்த் ஆகாஷ் போன்றோர் நடிக்கிறார்கள்
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையின் கொண்டாட்டங்களை எதார்த்தமாக பதிவு செய்து நவீன கால சினிமாவில் நவீன புரட்சியை ஏற்படுத்தியவர் இயக்குநர் பா.இரஞ்சித்.
 
திரைப்படங்கள் இயக்குவதோடு, அறிவு சார்ந்த படைப்புகளை கொண்டிருக்கும் இளம் படைப்பாளிகளின்  படைப்புகளை தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நல்ல படைப்புகளை தயாரித்து வருகிறார். அதன் அடிப்படையில் இவர் தயாரிப்பில் மாரி செல்வராஜ், இயக்கத்தில் “பரியேறும் பெறுமாள்', படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகி இருக்கும் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படத்தைத் தொடர்ந்து
 
3ovjje8

 
நீலம் புரடக்சன்ஸ் , மற்றும் பத்ரி கஸ்தூரியின் ஷர்தா எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் இன்று துவங்கப்பட்டது.
 
பா. இரஞ்சித்திடம் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் மாரி இந்த படத்தை இயக்குகிறார்.
 
ev0m1mo8

 
கலையரசன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள்.
 
விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.  படத்தின் முதல்கட்டபணிகள் இன்று துவங்கியிருக்கிறார்கள்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்