முகப்புகோலிவுட்

உதயநிதி ஸ்டாலின் பட ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பாயல் ராஜ்புட்

  | October 24, 2018 11:31 IST
Angel

துனுக்குகள்

 • உதயநிதி ஸ்டாலின் கைவசம் 3 படங்கள் உள்ளது
 • இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக டபுள் ஹீரோயின்ஸாம்
 • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
ப்ரியதர்ஷனின் ‘நிமிர்' படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் கைவசம் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே', மிஷ்கினின் ‘சைக்கோ', கே.எஸ்.அதியமானின் ‘ஏஞ்சல்' என 3 படங்கள் உள்ளது. இதில் ‘ஏஞ்சல்' திரைப்படம் ரொமாண்டிக் ஹாரர் ஜானரில் உருவாகி வருகிறது.
 
இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ‘கயல்' ஆனந்தி, பாயல் ராஜ்புட் என டபுள் ஹீரோயின்ஸாம். ‘OST ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்து வரும் இதற்கு டி.இமான் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.
 
தற்போது, இப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகை பாயல் ராஜ்புட்டும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பாயல் ராஜ்புட்டே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதோடு, ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்லையும் ஷேரிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com