முகப்புகோலிவுட்

கிரைம் திரில்லர் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பல்லக் லால்வாணி!!!

  | September 13, 2019 16:11 IST
Arun Vijay

துனுக்குகள்

 • இந்த படத்தில் அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்
 • பல்லாக் லால்வாணி ஜி.வி.பிரகாஷ்வுடன் குப்பத்து ராஜா படத்தில் நடித்தார்
 • ஹரிதாஸ் இயக்கிய குமரவேல் இப்படத்தை இயக்கி வருகிறார்
குற்றவியல் திகில் படத்தில் களம் இறங்கும் அருண் விஜய்க்கு ஜோடியாக பல்லக் லால்வாணி இணைந்திருக்கிறார்.
 
lmhv10l8


சமீபத்தில் நடிகர் அருண் விஜய் ‘தடம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் ‘சஹோ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் பொருளாதார ரீதியாக வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தை அடுத்து ‘அக்னி சிறகுகள்', ‘பாக்ஸர்', ‘ மாஃபியா' உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில்.
 
2dnq1c6o


ஹரிதாஸ் திரைப்படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் அடுத்ததாக இயக்கும் குற்றவியல் திகில் படத்தில்  அருண் விஜய் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய்க்கு ஜோடியாக பல்லக் லால்வாணி நடிக்கவிருக்கிறார். இவர் இதற்கு முன் குப்பத்து ராஜா, சிக்ஸர் படத்தில் நடித்துள்ளார். நடப்பு சூழலில் உள்ள சமூக அவலத்தின் ஒரு பகுதியை மையமாக கொண்டு தீவிரமாக அலசும் ஒரு திரில்லர் படமாக உருவாக்க இருக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். நெஞ்சமுண்டு நேர்மயுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com