முகப்புகோலிவுட்

'இது எங்க தளபதி படத்தோட கதை' - 'Parasite' படத்தை விமர்சிக்கும் ரசிகர்கள் ?

  | February 11, 2020 11:27 IST
Parasite Has Won 6 Trophies

அந்த வீட்டில் இருக்கும் அந்த பணக்காரரை சார்ந்து வாழ்வது போல கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.

துனுக்குகள்

 • 'இது எங்க தளபதி படத்தோட கதை' -'Parasite' படத்தை விமர்சிக்கும் ரசிகர்கள் ?
 • 6 ஆஸ்கார் விருதுகளை வென்று குவித்த இந்த 'பாரசைட்'
 • 1999ம் ஆண்டு 'இளைய தளபதி' விஜய் நடித்து வெளியான 'மின்சார கனவு'
திரைப்பட உலகில் அதிக மதிப்புடன் விளங்கும் விருதுகளில் ஆஸ்கார் விருதுகளும் ஒன்று. 2020ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கார் விருதுகளை குவித்தது Parasite என்னும் கொரியன் திரைப்படம். பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகும்போது, அது பிற படங்களின் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்ற விமர்சனங்கள் எழுவது வாடிக்கையான ஒன்று. தற்போது இந்த 'பாரசைட்' என்னும் இந்த கொரியன் திரைப்படத்திற்கும் அப்படி ஒரு விமர்சனம் வந்துள்ளது. 6 ஆஸ்கார் விருதுகளை வென்று குவித்த இந்த 'பாரசைட்' படத்தின் கதை, 1999ம் ஆண்டு 'இளைய தளபதி' விஜய் நடித்து வெளியான 'மின்சார கனவு' படத்தின் கதையை போல உள்ளது என்று சிலர் சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கின்றனர். மின்சார கனவு படத்தில், தனது காதலியை மணந்து கொள்வதற்காக பெரிய பணக்காரரான விஜயும் அவரது குடும்பத்தினரும் அந்த பெண்ணின் வீட்டில் ஏழை தொழிலாளிகளை போல நடிப்பார்கள். மேலும் தாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்று யாரும் கண்டுகொள்ளாதவாறு நடந்துகொள்வர். இந்நிலையில் 'பாரசைட்' படத்தில் பணக்காரர் ஒருவர் வீட்டில், ஏழை குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் மற்றும் மகள் என்று அனைவரும் தாங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று யாருக்கும் தெரிவிக்காமல், அந்த வீட்டில் இருக்கும் அந்த பணக்காரரை சார்ந்து வாழ்வது போல கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. ஆகையால் இந்த கதைக்களம் 'மின்சார கண்ணா' படத்தின் கதையை தழுவி உள்ளது என்று சிலர் கூறிவருகின்றனர்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com