முகப்புகோலிவுட்

“பரியேறும் பெருமாள்” படத்திற்கு புதுச்சேரி அரசு விருது அறிவிப்பு!

  | September 10, 2019 20:00 IST
Pariyerum Perumal

துனுக்குகள்

  • பரியேறும் பெருமாள் படம் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது
  • இப்படம் திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றது
  • புதுச்சேரி அரசு இப்படத்திற்கு விருது அறிவித்திருக்கிறது
இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்'. விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தொடர்ந்து பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது.
 
சமூகத்தில் காலம் காலமாக புறையோடிக்கிடக்கும் சாதி குறித்த நேர்மையான விவாவதத்தை மைய்ப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் மிகக்குறைவு. அதன் அடிப்படையில் சாதி பிரச்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பரியேறும் பெருமாள் திரைப்படம் சமகாலத்தில் நேர்மையான உரையாடலை தமிழ் சமூகத்தினரிடையே ஏற்படுத்தியிருந்தது.
 
பல்வேறு திரைப்பட விழாக்களில் பல்வேறு விருதுகைள கைப்பற்றியது இப்படம். இந்தியா மட்டும் அல்லாமல் உலன அரங்கிலும் பல்வேறு நாடுகளில் இப்படம் திரையிடப்பட்டு பரிசுகளையும் விருதுகளையும் வென்றது. இந்நிலையில் புதுச்சேரி அரசு சார்பாக ஆண்டு தோறும் வழங்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் விருது இந்தாண்டு இப்படத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.  இதற்கு முன்பு மனுசங்கடா திரைப்படம் இவ்விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்