முகப்புகோலிவுட்

'இது வேற லெவல் டான்ஸ்..!!' - Quarantineனில் ஹாட்டான ஸ்டெப்ஸ் போட்ட வேதிகா..

  | May 22, 2020 08:55 IST
Vedhika Hot Dance

துனுக்குகள்

  • முனி, காளை, சக்கரக்கட்டி போன்ற படங்களில் நடித்த நடிகை
  • இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் குடும்பத்துடன் தனது
  • Parris Goebel என்ற நியூஸிலாந்தை சேர்ந்த பிரபல நடன அமைப்பாளர்
முனி, காளை, சக்கரக்கட்டி போன்ற படங்களில் நடித்த நடிகை வேதிகாவிற்கு ஆரம்ப நிலையில் கோலிவுட்டில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பின் இயக்குநர் பாலா இயக்கிய பரதேசி படத்தில் நடித்த வேதிகாவிற்கு சிறந்த நடிப்பிற்கான மூன்று விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் குடும்பத்துடன் தனது நேரத்தை செலவிடும் வேதிகா தனது சமூக வலைத்தளங்களில் படு ஆக்ட்டிவாக உள்ளார் என்றால் அது மிகையல்ல. கடந்த புதன்கிழமை அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் படு ஹாட்டான நடனம் ஒன்றை ஆடியுள்ளார். 

Parris Goebel என்ற நியூஸிலாந்தை சேர்ந்த பிரபல நடன அமைப்பாளர் ஆடிய பாடலுக்கு அவர் அந்த காணொளியில் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2020ம் ஆண்டு வெளியாக இருக்கும் விநோதன், ஹோம் மினிஸ்டர் மற்றும் jungle போன்ற படங்களில் வேதிகா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com