முகப்புகோலிவுட்

‘ஒரு செருப்பு’ மட்டும் அணிந்து சென்று விருது வாங்கிய பார்த்திபன்..!

  | October 17, 2019 17:55 IST
Parthiban

துனுக்குகள்

 • ஒத்த செருப்பு படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது
 • இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என மூன்றும் ஒரே ஆளால் வெளியான முதல் படம் இது
 • இப்படத்திற்கு தொடர்ந்து பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது
ஒத்த செருப்பு படத்துக்காக WE awards வழங்கிய விருதைப் பெற ஒரு காலில் மட்டும் ஷூ அணிந்து சென்றுள்ளார் பார்த்திபன்.

பார்த்திபன் அவரே எழுதி, இயக்கி, நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு - சைஸ் 7. படம் முழுக்கம் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருப்பார். மற்ற சில காதாப்பாத்திரங்கள் கதையில் இருந்தாலும், அவர்களின் குரல் மட்டுமே கேட்கும்படி அமைந்திருக்கும். தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு வித்தியாசமான முயற்சியாக இந்தப்படம் காணப்பட்டது. இப்படத்தை, அவரே தனது பயாஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்தார். இப்படத்துக்கு சத்யா இசையமைத்திருந்தார். படத்திற்கு கொடுக்கப்பட்ட தலைப்பும் எல்லோரையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்திருந்தது. கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியான இப்படத்தை பார்த்துவிட்டு பல அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ஆஸ்கார் விருது பெறவும் தகுதியுடையது என பேசப்பட்டது.

ஒத்த செருப்பு திரைப்படம் India Book of Records மற்றும் Asia Book of Records புத்தகங்களிலும் இடம் பிடித்துள்ளது. படத்தின் இயக்குனரே தனி ஒருவராக நடித்து வெளியான முதல் திரைப்படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது. மேலும், இப்படம் 50-வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒத்த செருப்பு படத்திற்கு WE awards விருது அறிவித்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு விருது வாங்கச் சென்ற பார்த்திபன், தனது ஒரு காலில் மட்டும் ஷூ அணிந்து சென்றூள்ளார். ஒரு காலணியொடு மேடையேரி விருது வாங்கிய அவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு, வைரலானது. அவற்றை பகிரும் ரசிகர்கள் பலரும், பார்த்திபனால் மட்டுமே இப்படியெல்லம் செய்யமுடியும் என பாராட்டிவருகின்றனர்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com