முகப்புகோலிவுட்

பார்த்திபன் படத்துடன் மோதும் ‘சஹோ’!

  | August 07, 2019 15:40 IST
Sahoo

துனுக்குகள்

  • சஹோ படம் வரும் 30ம் தேதி வெளியாக இருக்கிறது
  • பார்த்திபனின் ஒத்த செருப்பு பல்வேறு விருதுகளை வென்றுள்ளது
  • ஒத்த செருப்பு திரைப்படம் ஒருவர் மட்டுமே நடித்துள்ள புதிய கதை
பாகுபலி வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் ‘சாஹோ'. சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். இவர்களுடன் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.  இப்படம் ஆகஸ்ட் 30-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு அறிவித்திருந்தது.
 
இந்நிலையில், பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ‘ஒத்த செருப்பு சைஸ் 7' படம் ஆகஸ்ட் 30-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாஹோ படத்துடன் ஒத்த செருப்பு படமும் மோத உள்ளது உறுதியாகியுள்ளது. பயோஸ்கோப் பிலிம் ப்ரேமர்ஸ் சார்பில் இயக்குநர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பல்வேறு திரைப்பட விருது விழாக்களில் பங்க பெற்று விருதுகளை வென்றுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆகஸ்ட் 30ம் தேதி சூர்யா நடிப்பில் காப்பான் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் அதன் தேதி மாற்றப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்