முகப்புகோலிவுட்

படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடும் பார்த்திபன்! 5 மணிக்கு காத்திருக்கும் ஆச்சர்யம்!

  | September 25, 2019 14:12 IST
Oththa Seruppu

துனுக்குகள்

 • இந்த படத்தை எழுதி, இயக்கி , தயாரித்து இருக்கிறார் பார்த்திபன்
 • இப்படத்தின் வெற்றி விழாவை கமலா திரையரங்கில் கொண்டாடுகிறார் இவர்
 • மாற்று திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்குவதாக அறிவித்துள்ளார் இவர்
நடிகர் இயக்குநர் என பன்முகத்தன்மையோடு திரைத்துறையில் முத்திரை பதித்த பார்த்திபன் நடித்து எழுதி இயக்கியுள்ள படம் ‘ஒத்த செருப்பு சைஸ்7'. இந்த படத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்த படத்தில் இவர் ஒருவர் மட்டுமே நடித்திருக்கிறார். எழுத்து, இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என எல்லா வேலைகளையும் ஒருவரே செய்து வெளியிடப்படும் உலகின் முதல் படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளார் .
 
இந்த படம் கடந்த வாரம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்பம் குடும்பமாக இப்படத்தை காண ரசிகர்கள் தொடர்ந்து திரையரங்கை நோக்கி பயணித்து வருகிறார்கள்.  பொதுவாக ஒரு திரைப்படத்தின் வெற்றியை பிரபல நட்சத்திர விடுதிகளில் கொண்டாடுவார்கள்.  எல்லா விஷயத்தையும் புதுமையாக செய்ய வேண்டும் என்கிற மனநிலையில் இருப்பவர் பார்த்திபன். அதன் அடிப்படையிலே இந்த படத்தை இயக்கி தயாரித்து சாதனைப் படைத்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்கிற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் இன்று மாலை 5 மணியளவில், இந்த படத்தில் மகேஷ் என்கிற மாற்றுத்தினாளி கதாபாத்திரம் இடம் பெறும். அவ்வாறு கால் இழந்து இருப்பவர்களுக்கு என்னால் முடிந்த அளவு செயற்கை கால் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருக்கிறார் பார்த்திபன்.
 
 
 
 
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com