முகப்புகோலிவுட்

பார்வதி மேனனின் வேற லெவல் ஒர்க்அவுட்! வைரலாகும் புகைபடங்கள்.!

  | August 31, 2020 14:41 IST
Parvathy Menon

2008ம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான 'பூ' என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் நடிகை என்ற பெயருடன் தென்னிந்திய திரைத்துறையில் பிரபலமாக அறியப்படும் நடிகை பார்வதி. 2006ம் ஆண்டி வெளியான மலையாள திரைப்படமான "Out of Syllabus" என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான பார்வதி மேனன், ஆரம்ப நிலையில் பல மலையாள படங்களில் நடித்து, பின்னர் 2008ம் ஆண்டு பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான 'பூ' என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாள படங்களில் நடித்த இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மரியான்' படத்தின் மூலம் தமிழில் பல ரசிகர்களை கவர்ந்தார். சென்னையில் ஒரு நாள், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உலக நாயகனின் எழுத்தில் வெளியான உத்தம வில்லன் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ldpnm42o

சமூக ஊடகங்களில் எப்போதும் செயல்பாட்டில் இருக்கும் அவர், தனது கருத்துக்களுக்கும், பிரச்சினைகளில் தைரியமான நிலைப்பாட்டிற்கும் பெயர் பெற்றவர்.

தனது சமீபத்திய ஒர்க்அவுட் அமர்விலிருந்து சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் பார்வதி. இந்த புகைப்படங்களில் அவரது உள் வலிமையையும், ஆரோக்கியத்தையும் அவர் உறுதிபடுத்தியுள்ளார். புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர் "போவது கடினமாகும்போது, கடினமானது போகிறது!" என்று எழுதினார்.

பணி முன்னணியில் "ராச்சியம்மா" மற்றும் "ஹலால் லவ் ஸ்டோரி" ஆகிய இரண்டு மலையாள திரைப்படங்களில் நடித்திவருகிறார். இதற்கிடையில், பார்வதி சமீபத்தில் அளித்த  பேட்டியில் அடுத்ததாக திரைப்படங்களை இயக்கத் தயாரகிவருவதாகவும், இந்த லாக்டவுனில் இரண்டு ஸ்கிரிப்ட்களை எழுதியுள்ளதாகவும், அதில் ஒன்று உளவியல் த்ரில்லராகவும், மற்றொரு படம் அரசியல் பொழுதுபோக்காகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com