முகப்புகோலிவுட்

‘கைதி’ படத்தை லேட்டாக பார்த்து பாரட்டிய பிரபலம்..! லோகேஷ் கனகராஜ் மகிழ்ச்சி..!

  | December 05, 2019 12:00 IST
Kaithi

துனுக்குகள்

 • கைதி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
 • இப்படத்தில் நடிகர் நரேன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
 • இப்படத்துக்கு சி.எஸ் சாம் இசையமைத்துள்ளார்.
கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தை ஒரு மாதம் கழித்து பார்த்த பிரபல கேமராமேன், படக்குழுவை பாராட்டியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ‘கைதி'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பேனரில் எஸ்.ஆர். பிரபு தயாரித்த இப்படத்தில் நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், கே.பி.ஒய் தீனா, ரமணா, பேபி மோனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சி.எஸ். சாம் இசையமைத்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இத்திரைப்படம் வெளியான ஒரே மாததில் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்று வரை ஒரு சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
தற்போது இப்படத்தை ஹாட்ஸ்டாரில் பார்த்த பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி, ஒளிப்பதிவாளர் சத்யா உள்ளிடோரை பாராட்டியுள்ளார்.

பி.சி. ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் “தற்போது தான் படத்தை ஹாட்ஸ்டாரில் பார்த்தேன், ஹைதராபாத்தில் ஹோட்டிங்கில் பிஸியாக் இருந்தேன். ‘கைதி' இருக்கை முனையில் உட்கார்த்து பார்த்த அனுபவம் கிடைத்தது. 
படத்தின் அனைத்து அம்சங்களும் இரவில் நடப்பதால் சரியான தொனியில் அமைக்கப்பட்டிருந்தது. வாழ்த்துக்கள் லோகேஷ். கார்த்தி, உங்களின் உழைப்பு பேசுகிறது. சத்யா வின் ஒளிபதிவு பெருமையடையச் செய்கிறது” என பாராட்டி பதிவிட்டுள்ளார். இதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்தார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com