முகப்புகோலிவுட்

'ஹே ராம்' வெளியாகி 20-வது ஆண்டு..!! கொண்டாடும் ரசிகர்கள்.! வருந்தும் கமல்..!

  | February 18, 2020 17:30 IST
20 Years Of Hey Ram

20 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில் வெளியான கமல் ஹாசனின் ஹேராம் திரைப்படத்தினை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடிவருகினார்.

20 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில் வெளியான கமல் ஹாசனின் ஹேராம் திரைப்படத்தினை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடிவருகினார்.

கமல் ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து 2000-ம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேது வெளியான திரைப்படம் ‘ஹேராம்'. இப்படத்தில் கமல் ஹாசனுடன் ஷாருக் கான், ராணி முக்கர்ஜி, வசுந்த்ரா தாஸ், ஹேமமாலினி, அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

வெளியான போது பல சர்ச்சைகளைக் கிளப்பிய இப்படம், காலப்போக்கில் இப்படத்தின் கருத்துக்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்று வரை இப்படம் பலதரப்பட்டர்களிடையே பலவகையில் பேசப்பட்டுவருகிறது. தமிழ் சினிமாவிலும், சமூகத்திலும் இப்படம் ஏற்படுத்திய தாக்கம் அப்படி. இந்து -  முஸ்லிம் அரசியலை பேசும் படமாகவும், காந்தியை சுட்டுக் கொன்றதன் பின்னணியைக் கூறும் படம் என்றும் இப்படத்தின் மீதான கருத்துக்கள் ஏராளம்.

இப்போதும் நடைபெற்றுவரும் சமூகப் பிரச்சினைகளுடன் ஒத்துப்போகும் இப்படம் வெளியாகி இன்றோடு சரியாக 20 வருடங்கள் ஆகியுள்ளது. இதனை ரசிகர்களும், இணையவாசிகளும் #20YearsOfHeyRam என்ற ஹாஷ்டேகினைப் பயன்படுத்தியும், இப்படத்திலிருந்து சில காட்சிகளைப் பதிவிட்டும் கொண்டாடிவருகின்றனர்.

இதற்கிடையில், கமல் ஹாஸன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஹே ராமின் 20 ஆண்டுகள். அந்த நேரத்தில் நாங்கள் இப்படத்தை செய்ததில் மகிழ்ச்சி. படம் பேசிய அச்சங்களும் எச்சரிக்கைகளும் தற்போது நிறைவேறிக்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. இந்த சவால்களை நாட்டின் நல்லிணக்கத்திற்காக் நாம் சமாளிக்க வேண்டும். நாளை நமதே” என பதிவிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்