முகப்புகோலிவுட்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பெரும் வரவேற்பை பெற்ற ‘பேரன்பு’

  | November 27, 2018 11:30 IST
Mammootty Film

துனுக்குகள்

  • ‘பேரன்பு’ படத்தில் ஹீரோவாக ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டி நடித்துள்ளார்
  • ‘தங்கமீன்கள்’ சாதனா முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம்
  • இப்படம் கோவாவில் நடைபெற்று வரும் 49-வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையி
‘கற்றது தமிழ், தங்கமீன்கள்' படங்களின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் ராம் இயக்கத்தில் கடந்த ஆண்டு (2017) வெளியான படம் ‘தரமணி'. இதனைத் தொடர்ந்து ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேரன்பு'. இதில் ஹீரோவாக மலையாள நடிகர் ‘மெகா ஸ்டார்' மம்மூட்டி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளாராம்.

மேலும், முக்கிய வேடங்களில் இயக்குநர் சமுத்திரக்கனி, ‘தங்கமீன்கள்' புகழ் சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சூரிய பிரதமன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘ஸ்ரீ ராஜலக்ஷ்மி ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் பாடல்கள் மற்றும் 2 டீசர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கோவாவில் நடைபெற்று வரும் 49-வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமாப் பிரிவில் திரையிடப்பட்டது. தற்போது, இயக்குநர் ராம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “49வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற ‘பேரன்பு' திரைப்படத்தின் முதல் இந்திய பிரத்யேக காட்சி நூற்றுக்கணக்கான சினிமா ரசிகர்களால் அரங்கு நிறைந்தது. திரைப்படத்தின் பெரும் வரவேற்ப்பை தொடர்ந்து இன்று (நவம்பர் 27-ஆம் தேதி) இரவு 11.30 மணிக்கு ஐநாக்ஸ்- III (பாஞ்சிம், கோவா) திரையரங்கில் பேரன்பு மீண்டும் திரையிடப்படவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்