முகப்புகோலிவுட்

தனுஷுடன் இணைந்த 'பேட்ட' இயக்குனர்..! #D40 லேட்டஸ்ட் அப்டேட்ஸ்..

  | December 20, 2019 11:22 IST
Dhanush 40

துனுக்குகள்

 • தனுஷ் தற்போது ‘பட்டாஸ்’ படத்தில் நடித்துவருக்கிறார்.
 • தனுஷுன் D40 படத்தை Y Not Studios தயாரிக்கிறது.
 • #D40 படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
தனுஷின் 40-வது திரைப்படத்தை பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தனுஷ் தற்போது ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘பட்டாஸ்' திரைப்படத்தில் நடித்துவருகிறார். அதையடுத்து அவர் நடித்துவரும் 40-வது திரைப்படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படத்தை பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் தனுஷ், ஐஸ்வரியா லெக்ஷ்மி, ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ், கலையரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் பேனரில் எஸ். சசிகாந்த் தயாரித்துள்ளார். சக்கரவர்த்தி ராமச்சந்திரன் இணைந்து தயாரிக்கிறார்.
இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படதுக்கு சந்தோஷ் நாராயணன் சையமைத்துவருகிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார்.
இப்படம் குறித்த மீடியா ரிலீஸை வெளியிட்ட ஒய் நாட் ஸ்டூடியோஸ், இப்படம் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு உள்ளதாகவும், இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.இந்த கார்த்திக் சுப்பராஜ்-தனுஷ் காம்போ திரைப்படத்துக்கு சுருளி என தலைப்பிடப்பட்டதாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com