முகப்புகோலிவுட்

பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணையும் மேகா ஆகாஷ்.!

  | July 06, 2020 15:59 IST
Salman Khan

துனுக்குகள்

  • மேகா ஆகாஷ் ‘சேட்டிலைட் ஷங்கர்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
  • 'ராதே' பாலிவுட் திரைப்படத்தை பிரபு தேவா இயக்குகிறார்.
  • இப்படத்தில் நடிகர் பரத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்தின் ‘பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்  நடிகை மேகா ஆகாஷ். மேலும், தனுஷுடன் ‘என்னை நோக்கி பாயும் தொட்டா', சிம்புவுடன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்',  அதர்வாவுடன் ‘பூமராங்' ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், தெலுங்கில் ‘லை', ‘சல் மோகன் ரங்கா' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள மேகா ஆகாஷ், கடந்த ஆண்டு சூரஜ் பஞ்சோலி நடித்த ‘சேட்டிலைட் ஷங்கர்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

இந்நிலையில், இப்போது தனது இரண்டாவது பாலிவுட் திரைப்படத்தை ஒரு பெரிய நட்சத்திரத்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

பிரபு தேவா இயக்கத்தில் அடுத்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கும் ‘ராதே' படத்தில் மேகா ஆகாஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் பரத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில், சல்மான் கான் மற்றும் பரத் இருவரும் போலீஸ் அதிகாரிகளாகக் நடிக்கின்றனர்.

மேகா ஆகாஷ், தமிழில் தற்போது ஒரு பக்கக் கதை, யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். மேலும், தெலுங்கில், மனு சரித்ரா எனும் படத்தில் நடிக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com