முகப்புகோலிவுட்

"பரீட்சை என்பதே மன உளைச்சல் தான்..!!" - பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கும் விவேக்

  | May 18, 2020 15:06 IST
Vivek About Exams

துனுக்குகள்

 • தற்போது தமிழகத்தில் கொரோனா காரணமாக நிலவும் ஊரடங்கில் இருந்து
 • ஆனால் தற்போது நிலவும் இந்த இக்கட்டான சூழலில் இந்த தேர்வுகளை
 • அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல
தற்போது தமிழகத்தில் கொரோனா காரணமாக நிலவும் ஊரடங்கில் இருந்து இன்று முதல் சில தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. கோவை, திருச்சி உள்பட 25 மாவட்டங்களுக்கு முன்பு இருந்ததைவிட கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை, காஞ்சிபுரம் உள்பட 12 மாவட்டங்களில் முன்பு இருந்த அதே கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 

ஆனால் தற்போது நிலவும் இந்த இக்கட்டான சூழலில் இந்த தேர்வுகளை நடத்தக்கூடாது, இது ஏற்கனவே கஷ்டங்களை அனுபவித்து வரும் மாணவர்களுக்கு மேலும் சுமையாக அமையும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த நிலை குறித்து நடிகர் சின்னக்கலைவாணர் விவேக் தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் "பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மன இறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப் பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயை செய்து பரிசீலிக்கவும்.", என்று குறிப்பிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com