முகப்புகோலிவுட்

எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்! - வைரலாகும் தங்கர் பச்சானின் FB பதிவு..!

  | March 31, 2020 17:46 IST
Thankar Bachan

"கால்களில் விழுந்து கேட்கிறேன். அரசாங்கம் நடத்தப் பணம் போதவில்லை, அதனால்தான் மதுக்கடைகளைத் திறக்க வேண்டியிருக்கிறது எனும் காரணத்தைக்கூறி மீண்டும் திறந்து விடாதீர்கள்"

கொரோனா வைரஸின் பரவலைக் குறைக்க, 21 நாள் பூட்டுதல் நாடு முழுவதும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து கணினியில் வேலை பார்ப்பவர்கள் மட்டும் வீட்டிலிருந்து வேலைபார்க்க, தினசரி வேலை செய்து சாப்பிடும் கூலித் தொழிலாளிகள் இந்த ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

 அதையடுத்து பலரும் அரசின் இந்த நடவடிக்கை ஏழைகளுக்கு ஏற்றதல்ல, பல கோடி கூலித் தொழிலாளிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்களை முன்வைக்க, பிரதமர் நரேந்திர மோடி ‘மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேறு வழியில்லை, அதனால் மன்னிக்கவும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இயக்குநர்-நடிகர் தங்கர் பச்சான் மிக நீண்ட கடிதத்தைத் தனது முகநூல் (Facebook) பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிட்டுள்ளார். அவரின் அந்த பதிவில் எழுதியதாவது,
“கொரோனாவை அலட்சியப்படுத்தியவர்களும், ஊடகங்களும் தான் கொரோனாவின் தீவிரத்தை மக்கள்தான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என இப்பொழுது குறைபட்டுக் கொள்கிறார்கள்.”

மேலும், “ஒருபக்கம் நோய் பரவுதலின் மின்னல் வேகத்தீவிரம்! மற்றொரு பக்கம் மக்களின் உயிர் காப்புப் போராட்டம்! இரண்டையும் அரசுதான் தீர்க்க வேண்டும். அரசு அறிவித்துள்ள உதவித்தொகையும், உணவுப்பண்டங்களும் கூடிய வரை அவரவர் வீடுகளுக்கே சென்றடைய உடனே ஏற்பாடு செய்ய வேண்டும்.

மூடியுள்ள மதுபானக்கடைகள் மீண்டும் திறக்கப்படலாம் எனும் செய்தி கசிகின்றது. தயவு செய்து உங்கள் கால்களில்  விழுந்து கேட்கிறேன். அரசாங்கம் நடத்தப் பணம் போதவில்லை, அதனால்தான் மதுக்கடைகளைத் திறக்க வேண்டியிருக்கிறது எனும் காரணத்தைக்கூறி மீண்டும் திறந்து விடாதீர்கள்.

நடந்து முடிந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதால் இந்த ஏழை எளிய மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. நீங்கள் கூறுவதையெல்லாம் நாங்கள் கேட்கிறோம்! நாங்கள் எதிர்பார்ப்பதை நீங்கள் ஒரு நொடிகூட தாமதிக்காமல் உடனே மேற்கொள்ளுங்கள். எங்களின் உயிரைக்காப்பாற்றுங்கள்!” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், முழு பதிவையும் படிக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள FB பக்கத்தை பார்க்கவும்…    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com