முகப்புகோலிவுட்

"அப்போ திரைப்படங்களை தடை செய்துவிடலாமா..?" - சூர்யாவிற்கு பதில் ட்வீட் போட்ட காயத்திரி ரகுராம்.!

  | September 14, 2020 15:45 IST
Neet

துனுக்குகள்

 • அவர் வெளியிட்ட அறிக்கையில் "அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித்
 • ஆனால் சூர்யாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ட்வீட்
 • திரைப்பட கொண்டாட்டங்களின்போது பலர் பேனர் காட்டும் நேரத்தில் கீழே
நீட் தேர்வு பயத்தால் தற்போது ஒரே நாளில் தமிழகத்தில் மூன்று பிள்ளைகள் தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தை உலுக்கியுள்ளது. பல துறையை சார்ந்த மக்களுக்கும் இதற்கு தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பல திரைப்பிரபலன்களும் நீட் தேர்வுக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். நேற்று நடிகர் சூர்யா இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை பலரின் பாராட்டுக்களை பெற்றுவருகிறது. 

அவர் வெளியிட்ட அறிக்கையில் "அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்விமுறையை சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கையை வகுக்கிறார்கள். அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்கள் அச்சம் இல்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது. தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி அதிகப்பட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப் பிழைகளைக் கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள் 'அனல் பறக்க' விவாதிப்பார்கள்..." என்று கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் சூர்யாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்ட்வீட் செய்துள்ளார் பிரபல நடிகையும் பா.ஜா.க-வை சேர்ந்தவருமான காயத்திரி ரகுராம் அவர்கள். அவர் வெளியிட்ட டீவீட்டில் "திரைப்பட கொண்டாட்டங்களின்போது பலர் பேனர் காட்டும் நேரத்தில் கீழே விழுந்து இறந்திருக்கிறார்கள். அதனால் படங்களை தடை செய்துவிடலாமா..? தயவுசெய்து பிள்ளைகளை நன்றாக படிக்கச்சொல்லி அவர்களை நல்ல முறையில் தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ள சொல்லுங்கள்." என்று கூறி ட்வீட் செய்துள்ளார்.  
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com