முகப்புகோலிவுட்

இசை புயல் ஏ.ஆர். ரகுமான் உட்பட பிரபலங்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி

  | March 13, 2019 13:22 IST
Pm Modi

துனுக்குகள்

  • அட்லி இயக்கும் விஜய் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து வருகிறார்
  • இரண்டு ஆஸ்கார் விருது பெற்ற முதல் தமிழன் ஏ.ஆர்.ரகுமான்
  • பிரபல பின்னணி இசை பாடகர் லதா மங்கேஸ்வர்
பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. பெரும் கட்சிகள் தேர்தலுக்கான வேலையை தொடங்கிவிட்டனர். நாடு முழுவதும் பிரச்சார பணியில் அரசியல் தலைவர்கள் விறுவிறுப்பான பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்.
ஒவ்வெரு தேர்தலிலும் வாக்களிப்பது என்பது அரசியல் சாசனம் வழங்கியிருக்கம் அடிப்படை உரிமை. இந்நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மாணிக்க மக்களின் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது.
 
அரசியல் தலைவர்கள் ஒரு புறம் வாக்கு சேகரிக்கும் வேலையில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்க, தேர்தல் ஆணையம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை இந்திய மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.
 
வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபலங்கள் சிலரை குறிப்பிட்டு மக்கள் அனைவரையும் வாக்களிக்க சொல்லுங்கள், நீங்கள் சொல்லும் போது உங்களது குரலை மக்கள் அதிகம் கவணிப்பார்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.
அவரது பதிவில் , பிரபல பின்னணி இசை பாடகி, லதா மங்கேஷ்கர், இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான், பிரபல கிரக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் ஆகியோரை குறிப்பிட்டு ‘உங்களிடம் பணிவான ஒரு வேண்டுகோள், உங்களைப்போன்றவர்கள் தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு சொல்லும் போது அது வெகுஜன மக்களின் கவணத்தை பெரும். அதற்காக மக்களை ஓட்டு போட அழையுங்கள். மக்களின் குரலை கேட்க ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமானதாகும் என்று பதிவிட்டிருக்கிறார்'  இதற்கு பதிலலித்துள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்
நாங்கள் செய்கிறோம் என்று பதிவிட்டிருக்கிறார்.
 
தேர்தல் ஆணையம் தேர்தலில் மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. சில சமயங்களில் திரைப்பிரபலங்களையும் இத்தகைய பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்வது வழக்கம்தான்.  இந்த முறை பிரதமர் மோடி பிரபலங்களிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதன் மூலம் மக்களின் கவணத்தை தன் பக்கம் ஈர்க்க முயலும் சூச்சமமாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்