முகப்புகோலிவுட்

“மரணத்திலும் கல்லாத அடிமைச் சமூகமே” - கவிஞர் வைரமுத்து காட்டம்... #RIPSujith

  | October 29, 2019 12:57 IST
Vairamuthu

துனுக்குகள்

  • சுஜித்தின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்து வைரமுத்து வீடியோ வெளியிட்டார்
  • எந்த மழையும் தாயின் கண்ணீர் கறையை கழுவமுடியாது - வைரமுத்து உருக்கம்
  • மரணத்திலும் கல்லாத மடச்சமூகமே..! - வைரமுத்து காட்டம்...
ஆழ்துளை கிணற்றில் விழுந்து, குழந்தை சுஜித் உயிரிழந்த சம்பவத்தையடுத்து வைரமுத்து கவிதை வாசித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் நடுகாட்டுபட்டியில் 2 வயது குழந்தை சுஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பல அரசியல் பிரமுகர்கள், திரியுலக பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் தங்களது வேதனைகளையும், வருத்தங்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை மூலம் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 

வைரமுத்து வெளியிட்ட வீடியோவில் அவர் “ வந்த மழையும், இனி எந்த மழையும் இந்த தாயின் கண்ணீர் கறையை கழுவ முடியுமா..?
அடேய் சுர்ஜித் இத்தனை பேர் அழுத கண்ணீரில், நீ மிதந்து மிதந்து மேலெழும்பியிருக்கலாம், ஆனால் அழுத கண்ணீரெல்லாம் உன்னை அழுகவைத்துவிட்டதே..!
உன்னை மீட்க கையில் கயிறு கட்டிப் பார்த்தோம், ஆனால் மரணம் உன் காலில் கயிறு கட்டிவிட்டதே..!
எவனவன் பின்கூட்டி பிறந்த குழந்தைக்கு, முன்கூட்டியே சவக்குழி வெட்டியவன்..?
உலகத்தின் நீளமான சவக்குழி இது தானோ, என்னவோ..!
நடக்கூடாதது நடந்தேறிவிட்டது...
மரணத்தில் பாடம் படிப்பது மடச்சமூகாம், மரணத்திலும் கல்லாதது அடிமைச்சமூகம்...
ஏ மடமைச்சமூகமே..! வாழ்வின் பக்கவிளைவு மரணமெனில்,
மரணத்தின் பக்கவிளைவு ஞானம் தானே..!
அந்தச் சவக்குழிக்குள் மன் விழுவதற்குள் அத்தனை அபாயக்குழிகளிஅயும் மூடிவிடு..,
அந்த மெழுகுவர்த்தி அணைவதற்குள் அத்துனை கண்ணீரையும் துடைத்துவிடு..,
ஏ வாணம் பார்க்கும் தொழில்நுட்பமே, சற்றே குனிந்து பாதாளம் பார்...
இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சிச் சாவுகள்..,” என்று கனத்த குரலில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். வைரமுத்துவின் ட்விட்டர் பதிவை கீழே பார்க்கவும்..,

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்