முகப்புகோலிவுட்

துப்பாக்கி முனையில் அட்டகத்தி தினேஷ், படபிடிப்ல் நடந்த ஸ்வாரஸ்யம்...!

  | February 13, 2019 11:26 IST
Dinesh

துனுக்குகள்

  • இப்படத்தை இயக்குநர் அதியன் ஆதிரை இயக்குகிறார்
  • இப்படத்தில் தினேஷ் கதாநாயகநாக நடிக்கிறார்
  • ரித்விகா, ஆனந்தி, ராம்தாஸ், லிங்கேஷ்,ஜான்விஜய் இன்னும் பலர் நடித்துள்னர்
இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் அதியன் ஆதிரையின் இயக்கத்தில் உருவாகிவரும் படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு.
 
இந்த படத்தில் நடிகர் தினேஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி நடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஷூட்டிங்கின் போது, அவரை கமாண்டோ படையினர் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்த ஸ்வாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேரியுள்ளது.
 
கிஷோர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை இயக்குநர் அதியன், தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஓடும் லாரியில் நடிகர் தினேஷ் தொங்கிக் கொண்டு செல்வது போன்ற காட்சிகளை லாரிக்குள் கேமரா வைத்து படமாக்கிக் கொண்டிருந்தனர்.
 
கேமரா லாரிக்குள் இருந்ததால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இது நிஜமான ஸ்டண்ட் காட்சி போன்று தோன்றியிருக்கிறது. இந்நிலையில், அந்த வழியே வந்த  ஸ்பெஷல் கமாண்டோ படை வீரர்கள் நிஜமாகவே ஹைவேஸில் இரவு நேரங்களில் செல்லும் லாரிகளில் ஏதோ நடக்கிறது என்ற சந்தேகத்தில் லாரியை சுத்தி வளைத்துப் பிடித்துள்ளனர்.
 
இதை அறியாத ஹீரோ தினேஷ், இது என்ன புதுசா கமாண்டோ வீரர்கள் எல்லாம் சீன்ல வராங்க இது சீன்லயே இல்லியே என்று அதிர்ச்சியடையாமல் சுற்றி வளைத்த போலீசார் வைத்திருந்த துப்பாக்கிகளை பார்த்து இது என்ன ஒரிஜினல் மாதிரியே இருக்கு ? என்று கேட்டுள்ளார் . நிஜ போலீசார் துப்பாக்கியை தினேஷ் மீது குறிவைத்துள்ளனர்.
 
இயக்குனர் சூட்டிங், சூட்டிங், என்று சத்தம்போட அதன் பிறகே தினேஷ் அதிர்சியடைந்துள்ளார். நெருங்கி வந்த வீரர்கள் தினேஷ் முகத்தை கவனித்த பின், இது நிஜமான சூட்டிங் என்பதை உறுதிபடுத்தியுள்ளனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
 
பின்னர், பார்ப்பதற்கு நிஜமாகவே இருக்கிறது என்று நடிகர் தினேஷை பாராட்டிச் சென்றுள்ளனர் படைவீரர்கள். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘அட்டக்கத்தி' தினேஷ், ரித்விகா, ஆனந்தி, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான்விஜய், ஜானிஹரி, வினோத் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தை பா.ரஞ்சித் தயாரித்து வருகிறார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்