முகப்புகோலிவுட்

“சூர்யாவிற்கு என்ன தெரியும்” சாடும் அரசியல்வாதிகள்; சூர்யாவிற்கு குவியும் ஆதரவு!

  | July 15, 2019 18:56 IST
Suriya

துனுக்குகள்

  • சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி வருகிறார்
  • சமமான கல்வியை கொடுக்காமல் நுழைவு தேர்வு வைப்பது சரியா சூர்யா கேள்வி
  • புதிய கல்வி கொள்கை பற்றி நாம் ஏன் இன்னும் பேசவில்லை சூர்யா வருத்தம்
புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா எழுப்பிய கேள்விகளுக்கு அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
 
சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் சார்பாக 12ம் வகுப்பில் அதிக மதிபெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை அன்று சென்னை வடபழனியில் நடைபெற்றது.
இதில் நடிகர் சூர்யா , கல்வியாளர்கள் பேராசிரியர் கல்யாணி, வசந்தி தேவி,  பேராசிரியர் மாடசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
அப்போது பேசிய சூர்யா, “குறைவான ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்து இருப்பது சரியல்ல. அந்த பள்ளிகளை தரம் உயர்த்தாமல் பள்ளிகளை மூடினால் கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் எங்கு செல்வார்கள். அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நுழைத்தேர்வு, தகுதித் தேர்வு நடத்துவதன் மூலம் தகுதியானவர்களை உருவாக்க முடியும்?
 
நம் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மாணிக்கு இந்தி புதிய கல்விக்கொள்கையைப் பற்றி நாம் ஏன் பேசாமல் இருக்கிறோம் என்று கேள்விகளை முன் வைத்திருந்தார்.
 
சூர்யாவின் இந்த விமர்சனம் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தநிலையில், சூர்யாவின் கருத்து குறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘புதிய கல்விக் கொள்கை பற்றி நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும். நன்கு தெரிந்துகொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம். ஆனால், எதுவுமே தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும். ஆங்கில வழி கல்வி கற்பதற்காக தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லும் நிலை இருப்பதால் அதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் அங்கன்வாடி மையங்களில் இருந்து ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டுள்ளது.
 
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளுக்கு எவ்வித ஆபத்துக்கள் இல்லாமல், அரசு பள்ளி எண்ணிக்கை குறையாமல் அரசு பார்த்துக் கொள்ளும்'

சூர்யாவின் கருத்து குறித்து பேசிய பா.ஜ.க தமிழிசை சௌந்தர்ராஜன், ‘புதிய கல்விக் கொள்கை என்றால் என்னவென்றே தெரியாமல் பலரும் விமர்சனம் செய்கின்றனர்' என்று தெரிவித்துள்ளார். என்று தெரிவித்தார். இதனை அடுத்து சூர்யாவின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தனிமனித தாக்குதலில் ஈடுபடும் அரசியல்வாதிகளை கண்டித்து ஸ்டாண்ட் வித் சூர்யா என்கிற ஹேஷ் டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்