முகப்புகோலிவுட்

‘தல’யுடன் ‘பொன்னியின் செல்வன்’ ஒளிப்பதிவாளர்..! வைரலாகும் த்ரோபேக் புகைப்படம்.!

  | August 17, 2020 23:18 IST
Thala Ajith

அஜித்தின் ‘வாலி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருந்தபோது, FEFSI உடன் சிக்கல்கள் இருந்ததால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் கடந்த 20 ஆண்டு காலமாக தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

கோலிவுட்டில் சுசி கனேசன் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளியான ‘ஃபைவ் ஸ்டார்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ரவி வர்மன். அதையடுத்து ஆட்டோகிராஃப், அன்னியன், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், வில்லு, காற்று வெளியிடை ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது மணி ரத்னத்தின் பிரம்மாண்ட திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் தனது பங்கினை அளித்துவருகிறார்.

ரவி வர்மன் சமீப நாட்களில் ‘photo of the day' என பல நினைவு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுவருகிறார்.

இந்நிலையில், அவர் நேற்று ‘தல' அஜித்துடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அதில் அஜித் மற்றும் ரவி வர்மனுடன் மறைந்த நடிகர் ‘இதயம்' முரளியையும் காணலாம். இருப்பினும், இந்த புகைப்படம் எங்கு படமாக்கப்பட்டது என்பது குறித்த எந்த விவரத்தையும் அவர் வெளியிடவில்லை. வர்மன் இந்த ஃபொட்டோவுக்கு “பொன்னான காலம்” என்று தலைப்பிட்டிருந்தார்.

அஜித்தின் ‘வாலி' படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருந்தபோது, FEFSI உடன் சிக்கல்கள் இருந்ததால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை என்பதை ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் முன்பு வெளிப்படுத்தியிருந்தார். ஆரம்பத்தில் சில காட்சிகளுக்கு படமாக்கிய வர்மன், இறுதியில் படத்திலிருந்து விலக வேண்டியிருந்தது. இருப்பினும், முன்பு படமாக்கப்பட்ட காட்சிகளில் பார்த்த படத்தின் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா அவற்றை விரும்பியுள்ளார், மேலும் ஒளிப்பதிவாளரைப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலர் அவரை அழைத்தது, படத்தில் வேலை செய்ய வேண்டாம் என்று எச்சரித்ததாகவும் ரவி வர்மன் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், தல அஜித் தன்னை அழைத்ததாகவும், அவர் யாருக்கும் பயப்படக்கூடாது என்றும் கூறினார் என்றும், அஜித்தின் பேச்சுதான் அவரை மீண்டும் பாதையில் கொண்டு வந்தது என்றும் அவர் வெளிப்படுத்தினார். இப்படத்தில் கௌரவ ஒளிப்பதிவாளராக வர்மன் புகழ் பெற்றார், இறுதியில் ஒளிப்பதிவு மறைந்த ஜீவாவால் செய்யப்பட்டது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com