முகப்புகோலிவுட்

டிசம்பரில் தொடங்குகிறதா ‘பொன்னியின் செல்வன்’?

  | September 10, 2019 15:06 IST
Ponniyin Selvan

துனுக்குகள்

  • பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவது மணிரத்னத்தின் கனவு
  • இப்படத்தை லைகா நிறுவனம் இயக்குவதாக தகவல்
  • இப்படத்தில் முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இப்படத்தில் நடிக்க தமிழ், மலையாளம், இந்தி ஆகிய திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களை தேர்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகின. அதன் படி இப்படத்தில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ். ஐஷ்வாயா ராய் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகின.
 
குறிப்பிடப்பட்ட நடிகர்கள் யாரும் அதிகாரப்பூர்வமாக இது குறித்து தகவல்கள் எதுவும் கூறாத நிலையில் நடிகை ஐஷ்வர்யா ராய் நிகர்ச்சி ஒன்றில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இவரைப்போலவே மலையாள நடிகர் ஜெயராம் இந்த படத்தில் இணைந்துள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
 
ஆனால் இப்படம் குறித்து இயக்குநர் மணிரத்னம் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் அறிவிக்கவில்லை என்பகு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படம் வரும் டிசம்பர் மாதம் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. டிசம்பர் மாதம் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்