முகப்புகோலிவுட்

‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் இணையும் இரண்டு கமல் பட நடிகைகள்!

  | May 21, 2020 14:01 IST
Thalaivan Irukkindran

இந்த படம் கமல்ஹாசனின் 1992-ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘தேவர் மகன்' திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.

கடந்த ஆண்டு, நடிகர் கமல்ஹாசன் தனது நீண்ட கால தாமதமான திட்டமான ‘தலைவன் இருக்கின்றான்' புத்துயிர் பெறுவதாக அறிவித்திருந்தார், மேலும் இப்படம் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பிலும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலும் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த படம் கமல்ஹாசனின் 1992-ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘தேவர் மகன்' திரைப்படத்தின் தொடர்ச்சி என்றும், இதில் முதல் பகுதியிலிருந்து வடிவேலு மற்றும் ரேவதி போன்ற நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது. மேலும் சமீபத்தில், ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி முதல் பாகத்தில் கமலால் கொல்லப்பட்ட நாசரின் மகன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுவருகிறது.

இப்போது, விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன் போன்ற திரைப்படங்களில் கமலுடன் நடித்த இரண்டு ஹீரோயின்களான ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் பூஜா குமார் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என்று யூகங்கள் எழுந்துள்ளன. இப்படம் குறித்து பரவிவரும் வதந்திகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com