முகப்புகோலிவுட்

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து பிரபல நடிகை நீக்கம்?

  | November 13, 2019 18:25 IST
Ponniyin Selvan

துனுக்குகள்

 • பொன்னியின் செல்வன் படத்தை மனிரத்னம் இயக்கவிருக்கிறார்
 • ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்
 • அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது
மைனா, திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் அறிமுகமான நடிகை அமலாபால் பசங்க, வேலையில்லா பட்டதாரி, தலைவா, தெய்வத்திருமகள் ஆகியவை முக்கிய படங்களாக அமைந்தன. ‘ஆடை' படத்தில் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்திருந்தார் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அவரது துணிச்சலுக்கு சிலர் பாராட்டும் தெரிவித்தனர்.
 
 தற்போது இவர் ‘அதோ அந்த பரவை போல', கடவர், ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் மனிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிவிருப்பதாக செய்திகள் வெளியாகின.
தற்போது இந்த படத்தில் இருந்து அமலாபால் நீக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தற்போது வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஜனநாதனின் உதவியாளர் இயக்கத்தில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அமலாபாலை ஒப்பந்தம் செய்து இருந்தனர்.
 
ஆனால் கடைசி நேரத்தில் அந்த படத்தில் இருந்தும் நீக்கி விட்டனர். தயாரிப்பு நிறுவனத்தின் சில நிபந்தனைகளுக்கு உடன்படாததால் அவரை நீக்கியதாக கூறப்பட்டது. அமலாபாலோ தயாரிப்பாளரின் ஆணாதிக்க மனப்பான்மையால், தான் வெளியேற்றப்பட்டதாக அறிக்கை வெளியிட்டார்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com