முகப்புகோலிவுட்

300 கோடி வசூலை எட்டிய பிரபாஸின் ‘சஹோ’!

  | September 03, 2019 19:30 IST
Sahoo

துனுக்குகள்

  • சுஜித் இப்படத்தை இயக்கி இருந்தார்
  • ஷர்த்தா கபூர் இப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார்
  • 300 கோடியை இப்படம் எட்டியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘சாஹோ' திரைப்படம் வசூல் சாதனைப்படைத்துள்து.
 
பாகுபலி படத்தின் வெற்றியை அடுத்து பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சஹோ'. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஷர்த்தா கபூர் நடித்திருந்தார். இப்படம் சுஜித் இயகத்தின் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியானது.
 
இப்படம் பல்வேறு விமர்சனங்களை கடந்து தற்போதுவரை 294 கோடி வசூல் சாதனை படைத்தள்ளதாக தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ளது.  வாரத்தின் முதல் நாளான நேற்று விநாயகர் சதூத்தி விடுமுறை என்பதால் நேற்று மட்டும் இந்தியில் இப்படம் 14 கோடி வசூலித்துள்ளது.  வெளிநாடுகளில் இப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றாலும் 55கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.
 
இந்த வரிசையில் தெலுங்கு திரையுலகில் அதிக வசூலைப் பிடித்த படங்களில் இப்படம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்