முகப்புகோலிவுட்

பிரபாஸின் அடுத்த படம் சூப்பர் அப்டேட்..!

  | January 18, 2020 11:16 IST
Prabhas

துனுக்குகள்

  • இப்படத்தை ராதா கிருஷ்ணா இயக்குகிறார்.
  • இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.
  • தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது.
“ரிபெல் ஸ்டார்” பிரபாஸின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமானது. 

இந்தியா முழுதும் திரும்பிப்பார்த்த வெற்றியை தந்த “பாகுபலி”,  “சஹோ” படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் தன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில் தலைப்பிடப்படாத இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கப்பட்டது.

கோபி கிருஷ்ணா மூவிஸ் தெலுங்கு திரையுலகின் மாரியாதைக்குரிய, மிகப்பெரும் நிறுவனம் ஆகும். பழபெரும் நடிகர் ஶ்ரீ கிருஷ்ணம் ராஜு இப்படத்தினை  தனது மேற்பார்வையில் வழங்குகிறார். மிகப்பெரும் பட்ஜெட்டில் இந்தியா முழுமைக்குமான படைப்பாக, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. மேலும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படவுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் நிறுவனம் UV Creations நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். ஸ்டைலீஷ் ஆக்‌ஷன் திரில்லரான “ஜில்” படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராதா கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்காக பிரமாண்டமான அரங்கம் அன்னபூர்னா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். ராதா கிருஷ்ணா எழுதி இயக்கும் இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்