முகப்புகோலிவுட்

‘சார்லி சாப்ளின் 2’ படத்துக்காக பிரபு தேவாவின் புதிய அவதார்

  | November 23, 2018 12:25 IST
Prabhu Deva

துனுக்குகள்

  • ‘சார்லி சாப்ளின்’ முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
  • இதில் நிக்கி கல்ராணி, ஆதா ஷர்மா என டபுள் ஹீரோயின்ஸாம்
  • பிரபு தேவா எழுதியுள்ள முதல் பாடல் இதுதானாம்
2002-ஆம் ஆண்டு பிரபு தேவா, பிரபு நடிப்பில் வெளியான படம் ‘சார்லி சாப்ளின்'. ஷக்தி சிதம்பரம் இயக்கியிருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இதன் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் ஷக்தி சிதம்பரம் – பிரபு தேவா – பிரபு மூவரும் கைகோர்த்துள்ளனர். இதில் நிக்கி கல்ராணி, ஆதா ஷர்மா என டபுள் ஹீரோயின்ஸாம்.

மேலும், முக்கிய வேடங்களில் ‘மகதீரா' புகழ் தேவ்கில், சமீர் கோச், ரவி மரியா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். இதனை ‘அம்மா கிரியேஷன்ஸ்' நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். அம்ரிஷ் இசையமைக்கும் இதற்கு சௌந்தரராஜன் ஒளிப்பதிவு செய்கிறார், கிரேஸி மோகன் வசனம் எழுதியுள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட 2 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ‘இவள இவள ரொம்ப பிடிச்சிருக்கு' என்ற பாடலை பிரபு தேவா எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபு தேவா எழுதியுள்ள முதல் பாடல் இதுதானாம். இப்பாடலை வருகிற நவம்பர் 25-ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் ரிலீஸ் செய்யவுள்ளார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்