முகப்புகோலிவுட்

பிரபுதேவா நடிக்கும் ‘தேள்’ – இயக்குநர் அவதாரம் எடுத்த ஹரிகுமார்

  | August 30, 2018 11:49 IST
Prabhudeva

துனுக்குகள்

  • ‘தூத்துக்குடி’-யில் ஹீரோவாக நடித்த ஹரிகுமார் இப்படத்தை இயக்கவுள்ளார்
  • ‘தேள்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளா
  • சத்யா இசையமைக்கவுள்ள இதற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்
‘லக்ஷ்மி’ படத்திற்கு பிறகு நடிகராக பிரபு தேவா கைவசம் ‘சார்லி சாப்ளின் 2, எங் மங் சங், காமோஷி, பொன் மாணிக்கவேல்‘ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. தற்போது, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க பிரபுதேவா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ‘தூத்துக்குடி, மதுரை சம்பவம்’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த ஹரிகுமார் இயக்கவுள்ளார். ‘தேள்’ என இப்படத்துக்கு டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாம்.

இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார். சத்யா இசையமைக்கவுள்ள இதற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யவுள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். வெகு விரைவில் இதில் நடிக்கவிருக்கும் இதர நடிகர்களின் பட்டியல் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்