முகப்புகோலிவுட்

காலா படத்தைத் தொடர்ந்து ரஜினியின் தர்பாரில் இணையும் நடிகர் யார் தெரியுமா?

  | April 30, 2019 21:17 IST
Pradeep Kabra

துனுக்குகள்

  • ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை இயக்கி வருகிறார்
  • அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்
  • லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது
பேட்ட படத்தை தொடர்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.
 
கடந்த 10-ம் தேதி துவங்கிய படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 23-ம் தேதி நயன்தாரா படப்பிடிப்பில் இணைந்தார். இதையடுத்து தொடர்ச்சியாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியே கசிந்தது. இதனால் தற்போது படத்தில் பணியாற்றுவோருக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் ஜதின் சர்னா தனது காட்சிகளை நடித்து முடித்துள்ளார். அவர் ரஜினியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடும் காட்சிகளில் நடித்துள்ளதாகவும், ஒருசில சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்நிலையில் காலா படத்தில் நானா படேகருக்கு உதவியாளராக நடித்திருந்த பிரதீப் காப்ரா தர்பார் படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் படத்தில் காமெடி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
v2i202d8

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்