முகப்புகோலிவுட்

"ஒரு நகைச்சுவை விருந்து..?" பிரசன்னா மற்றும் ஷாம் நடிப்பில் உருவாகும் 'ஸ்ருதி மாறாதே'.!

  | September 22, 2020 09:05 IST
Shruthi Marathe

துனுக்குகள்

  • AVNI மூவிஸ், பிரபல நடிகை குஷ்பூ மற்றும் அவரது கணவரும் பிரபல இயக்குநருமான
  • தற்போது திரைத்துறையில் 75 பேர் என்ற அளவைக் கொண்டு படப்பிடிப்புகள்
  • நடிகர் பிரசன்னா, ஷாம், யோகி பாபு மற்றும் அஸ்வின் காக்கமாவு இந்த படத்தில்
AVNI மூவிஸ், பிரபல நடிகை குஷ்பூ மற்றும் அவரது கணவரும் பிரபல இயக்குநருமான சுந்தர் சி அவர்களின் தயாரிப்பு நிறுவனம். தற்போது இந்த தயாரிப்பு நிறுவனத்தின் 6வது படமாக உருவாக உள்ளது 'ஸ்ருதி மாறாதே' என்ற படம். இந்த படத்தை பத்ரி என்பவர் இயக்க முக்கிய வேடத்தில் நடிகர்கள் ஷாம், பிரசன்னா மற்றும் அஸ்வின் காகமாவு ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு அவர்களும் இந்த இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.    

AVNI மூவிஸ் தயாரிப்பில் ஏற்கனவே பல படங்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை, மீசைய முறுக்கு மற்றும் நான் சிரித்தாள் ஆகிய திரைப்படங்கள் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் எடுக்கப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படமாக உருவாக உள்ளது "ஸ்ருதி மாறாதே". தற்போது திரைத்துறையில் 75 பேர் என்ற அளவைக் கொண்டு படப்பிடிப்புகள் இயங்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு  சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. நடிகர் பிரசன்னா, ஷாம், யோகி பாபு மற்றும் அஸ்வின் காக்கமாவு இந்த படத்தில் நடிக்க உள்ளனர். இந்த திரைப்படம் ஒரு முழுநீள காமெடி படமாக உருவாகி வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.  
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com