முகப்புகோலிவுட்

"நானும் ஷூட்டிங்கு ரெடி ஆகுறேன்" - சல்பேட்டா பரம்பரையில் இணைந்த தெலுங்கு நடிகர்.!

  | September 22, 2020 08:19 IST
Salpetta Parambarai

துனுக்குகள்

  • பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய திரைப்படம்
  • இப்படத்துக்காகக் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, தனது உடற்கட்டை
  • இந்நிலையில் இந்த படத்தில் டோலிவுட் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார் என்ற
பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய திரைப்படம் ‘சல்பேட்டா பரம்பரை'. வட சென்னையில் உள்ள ஒரு இளைஞன் தனது பாக்ஸிங் கனவுகளை எப்படி நிஜமாக்கிக்கொள்கிறான் என்பதைப் பற்றிய கதையாக இப்படம் அமையவுள்ளது. மேலும் இப்படத்தில், ‘அட்ட கத்தி' தினேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்துக்காகக் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, தனது உடற்கட்டை முற்றிலுமாக மாற்றிய ஆர்யா, தனது புகைப்படங்களை “ரஞ்சித் சார் நான் ரெடி” என சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதையடுத்து இப்படத்திற்கான முதற்கட்ட வேலைகள் துவங்கப்பட்டது. இருப்பினும், கொரோனா தொற்று காரணமாக அப்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் படம் தாமதமானது. ஆனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் படப்பிடிப்பு பணிகள் துவங்கி உள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்காகக நடிகர் கலை பிரத்தியேக பயிற்சி எடுத்து வருவதை காணொளியாக வெளியிட்டார் நடிகர் ஆர்யா. இந்நிலையில் இந்த படத்தில் டோலிவுட் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கே.ஜி.எப் சாப்டர் 1 மற்றும் பாகுபலி ஆகிய படங்களில் நடித்த ஜான் கொக்கின் இந்த படத்தில் இணைந்துள்ளார். அவரும் இந்த படத்திற்காக சிறப்பான முறையில் பயிற்சி எடுத்துவருவதை பதிவிட்டுள்ளார்.   


 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com