முகப்புகோலிவுட்

லிங்கா நடிப்பில் 'தடயம் - முதல் அத்தியாயம்' - மிரட்டலாக வெளியான ட்ரைலர்..!!

  | July 13, 2020 11:18 IST
Thadayam

துனுக்குகள்

 • இந்த லாக் டவுன் காலத்தில் திரைப்படங்களில் இணைய வழி வெளியீடு என்பது
 • இந்த தளத்தில் இயக்குநர் மணி கார்த்திக் என்பவரின் இயக்கத்தில் பிரபல நடிகர்
 • சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் ரீகல் டாக்கீஸ்
இந்த லாக் டவுன் காலத்தில் திரைப்படங்களில் இணைய வழி வெளியீடு என்பது மிகவும் பிரபலமாகி வருகின்றது என்றால் அது மிகையல்ல. அதே சமயம் படங்கள் இணையத்தில் வெளியாகும் தளங்களும் அதிகார்த்தித்துக்கொண்டே உள்ளது. தற்போது அட்ட கத்தி திரைப்படம் மூலம் பிரபலமான தயாரிப்பாளர் சி.வி. குமார் அவர்களின் முயற்சில் "ரீகல் டாக்கீஸ்" என்ற தளம் தற்போது வெளியாகி உள்ளது. 

இந்த தளத்தில் இயக்குநர் மணி கார்த்திக் என்பவரின் இயக்கத்தில் பிரபல நடிகர் லிங்கா நடிப்பில் உருவாகி உள்ளது 'தடயம் முதல் அத்தியாயம்' என்ற திரைப்படம். நடிகர் லிங்கா அண்மையில் வெளியான பெண்குயின், சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ள லிங்கா போலீஸ் அதிகாரியாக வளம்வருகின்றார். 

சுகுமாரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் என்பவர் இசையமைத்துள்ளார். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் ரீகல் டாக்கீஸ் தளத்தில் வெளியாக உள்ளது. தற்போது இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com