முகப்புகோலிவுட்

'தவறாக பேசிய வனிதா விஜயகுமார்' - நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணன்..!!

  | July 28, 2020 13:41 IST
Lakshmi Ramakrishnan

அதை தொடர்ந்து நானும் எனது கணவரும் எங்களது வழக்கறிஞர் மூலமாக வனிதா விஜயகுமார்க்கு.

சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகை வனிதா ஒரு இணைய வழி நேர்காணலில் தகாத வார்த்தைகளில் நடிகையும் சமூக ஆர்வலருமான திருமதி. லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களை தகாத வார்த்தைகளில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார் லட்சுமி அவர்கள். 

அந்த பதிவில் "நியான் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்த ஸ்கைப் நேர்காணலின்போது வனிதா விஜயகுமார் என்னையும் எனது கணவரையும் அனாகரிகமான வார்த்தைகளால் தாக்கி பேசி இருந்தார். என்னுடன் பேச வேண்டும் என்று வனிதா விஜயகுமார் தான் அந்த சேனலை தொடர்புகொண்டு ஏற்பாடு செய்யும்படி கேட்டு இருக்கிறார்.

ஆனால் நேர்காணலில் வேண்டுமென்றே தவறாக பேசினார் பின் அது ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது அதை தொடர்ந்து நானும் எனது கணவரும் எங்களது வழக்கறிஞர் மூலமாக வனிதா விஜயகுமார்க்கு, குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதன்படி inspector all women's police station Vadapalani & SRMC station deputy commissioner of police, Vadapalani assistant commissioner of police மற்றும் தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையம் ஆகியோருக்கும் நோட்டீஸ்சின் நகல் அனுப்பப்பட்டுள்ளது. என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com