முகப்புகோலிவுட்

விக்ரமிற்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்!

  | July 22, 2019 21:55 IST
Priya Bhavani Shankar

துனுக்குகள்

 • இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் படம் நல்ல வரவேற்பை பெற்றது
 • அருண் விஜய் நடிக்கும் மாஃபியா படத்தில் நடித்து வருகிறார் இவர்
 • சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார் இவர்
டி மாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் அஜய் ஞானமுத்து. இரண்டே படங்களில் தனக்கொன தன் முத்திரை பதித்தவர்.
 
இவர் தற்போது விக்ரமின் 58வது படத்தை இயக்குவதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை 7ஸ்கிரீன் சார்பாக தயாரிப்பாளர் லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வந்த நிலையில்  இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
 
பிரியா பவானி சங்கர் ‘மேயாத மான்', ‘கடைகுட்டி சிங்கம்', ‘மான்ஸ்டர்',  ஆகிய படங்களில் நடத்துள்ளார். இதனை அடுத்து ‘குறுதி ஆட்டம்', ‘வான்', ‘கசட தபர', அருண் விஜய்யின் ‘மாஃபியா', கமல் நடிக்கும் ‘இந்தியன்2', ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விக்ரமிற்கு ஜோடியாக அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com