முகப்புகோலிவுட்

கமல் நடிக்கும் “இந்தியன்2” படத்தில் பிரியா பவாணி சங்கர்?

  | July 17, 2019 14:02 IST (Angola)
Indian 2

லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பபிடத்தக்கது.  

கடந்த 1996ம் ஆண்டு இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் கமல் இரட்டை வேட்த்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘இந்தியன்' நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கினார்.
 
இரண்டாம் பாகத்திலும் கமல் நடிக்க அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் இப்படத்தில் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்தன.
 
இந்த ஆண்டு ஜனவரி 18ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில பிரச்னை கரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இந்தியன் 2வில் நடிக்க கமல் நாட்களை ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்க பிரியா பவாணி சங்கர் ஒப்பந்தமாகி இருப்பதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பபிடத்தக்கது.
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com