முகப்புகோலிவுட்

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் பிரியா பவாணி சங்கர்!!!

  | September 21, 2019 14:52 IST
Vishnu Vishal

துனுக்குகள்

 • சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்வா இப்படத்தை இயக்குகிறார்
 • முதல் முறையாக விஷ்ணு விஷாலுடன் ஜோடி சேர்கிறார் பிரியா பவாணி சங்கர்
 • இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இவர்
டி.வி. நாடகங்களில் நடித்து ரசிகர்களின் மனதை பிடித்தவர் பிரியா பவாணி சங்கர். கடந்த 2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் விரும்பும் நாயகியாக மாறினார். இப்படத்தை அடுத்து. கடைகுட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.
 
தற்போது குறுதி ஆட்டம், கசடதபர, களத்தில் சந்திப்போம், மாஃபியா, இந்தியன் 2, ஆகிய படங்களில் பிசியாகி விட்டார். தொடர்ந்து படவாய்ப்புகள் வந்துக்கொண்டே இருக்க வளரும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் பிரியா பவாணி சங்கர்.  இந்நிலையில் இயக்குநர் செல்வா அய்யாவு இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்கிவிருக்கிறார் பிரியா பவாணி சங்கர்.
 
விஷ்ணு விஷால் நடித்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்லா அய்யாவு. இவர் விஷ்ணு விஷாலின் நெருங்கிய நண்பர். மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது.
 
தற்போது 'ஜெர்சி' தமிழ் ரீமேக் மற்றும் 'எப்.ஐ.ஆர்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால். இதனை தொடர்ந்து செல்லாவின் படம் தொடங்கும் எனத் தெரிகிறது. இதில் நாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நாயகன் - நாயகி கூட்டணி இணைந்து பணிபுரியும் முதல் படமாக இது அமைந்துள்ளது. 'மான்ஸ்டர்' வெற்றிக்குப் பிறகு பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் பிரியா பவானி சங்கர்.
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com